குழந்தைத் தொழிலாளர்

கற்பவை கற்கும் முன்,
நின்றோம் பள்ளியை விட்டு!
அற்பவை பணம் ஆயினும்,
சென்றோம் ஆலை தொட்டு!
சொற்பவை கூழ் ஆயினும்,
தின்றோம் பாடு பட்டு!
ஏற்பவை எம் விதி என்று,
சென்றோம் கண்ணீர் விட்டு!

வலை வீசி வறுமை,
வலு போட்டு இழுக்க,
கவலையிலே மாட்டின,
குட்டி மீனு நாங்க!
விலை பேசி நாங்கள்
விற்று விட்ட கல்வி, இப்போ
தொலைதூரம் தாங்க!

சாலையின் புழுதியை,
சந்தனமாய் பூசினோம்!
சோலையின் முட்களுடனும்,
சந்தோஷமாய் பேசினோம்!
வேலை தேடி ஆலை சென்ற,
வேதனையாய் அந்த நொடி,
பாலைவனமாய் பாழானோம்!!

எழுதியவர் : சிவகுமார் (7-May-16, 3:40 am)
சேர்த்தது : சிவகுமார் முத்து
பார்வை : 75

மேலே