இன்றைய கல்வி

கல்வி நம் கண்களை போல,
காசு இருந்தா அதில மைவிழும்,
காசில்லைனா அதில மண்விழும்!

கல்வி என்பது கடவுளை போல,
காசு இருந்தா சிறப்பு தரிசனம்,
காசில்லைனா தர்ம தரிசனம்!

கல்வி என்பது கடலை போல,
காசிருந்து மூழ்கினா முத்து ,
காசில்லாம மூழ்கினா சங்கு !

கல்வி வாழ்க்கையின் வழி தான்,
காசு இருந்தா பளிங்கு பாதை,
காசில்லைனா பள்ளமே பாதை!

கல்வி எங்குமின்று வணிகம் தான்,
காசிருக்கிறவன் சம்பாதிக்கிரான்,
காசில்லாதவன் பாதிக்கபடுரான்!

எழுதியவர் : சிவகுமார் (7-May-16, 4:08 am)
சேர்த்தது : சிவகுமார் முத்து
Tanglish : indraiya kalvi
பார்வை : 4119

மேலே