எதிர்கால உலகம்

வேதியல் மாற்றமோ,
வெங்காய மாற்றமோ,
வேட்டையாடி வந்தவங்க,
வேற மாதிரி ஆனாங்க!

எண்ணிலடங்கா உயிர்கள்,
மண்ணுக்குள் மடிந்து
எண்ணெயா வந்தத,
என்ன தான் செஞ்சாங்க?

எல்லாத்தையும் எரித்துவிட்டு,
எதிர்கால சந்ததிக்கு
எங்க தேடிப் பார்த்தாலும்
பிலாஸ்டிக்க பரிசளிச்சாங்க!

ஆத்துக்கு நடுவுல,
அனைகட்டி வந்த நீர
அடுக்குமாடி கட்டி வச்சி ,
அப்பட்டமா அழிச்சிட்டாங்க!

குழாய் அடியில,
குடத்த வச்சி காத்திருந்தா
குப்பை நீரயெல்ல்லாம்,
குடிநீரா கொடுத்தாங்க!

விருந்து வச்சி ,
விதவிதமா உண்டதயெல்லாம்
மருந்து வச்சி,
மட்டமாக மாத்திட்டாங்க!

காலம் கொஞ்சம் கடந்து,
கண்முழிச்சி பார்த்தா
காலாழாக்கு அரிசிக்காக,
கால்கடுக்க நடப்பாங்க!

செத்த உயிர்கள் இங்கே,
சிறு எண்ணிக்கை தானென்று
செவ்வா கிரஹத்திலும்,
செயற்கைகோள் அனுப்பிட்டாங்க!

எழுதியவர் : சிவகுமார் (7-May-16, 4:13 am)
சேர்த்தது : சிவகுமார் முத்து
பார்வை : 184

மேலே