விரக்தி

புயலென இருந்தால்,
புழுதியோடு போயிருப்பேன்!
முயலென இருந்தால்,
மூன்றாண்டில் முடிந்திருப்பேன்!
அரவமென இருந்தால்,
அடிபட்டேனும் அழிந்திருப்பேன்!
திரவமென இருந்தால்,
திருக்கும்போதே தீர்ந்திருப்பேன்!
ஈயென இருந்தால்,
ஓர்இரவிலே இறந்திருப்பேன்!
தீயென இருந்தால்,
தண்ணீரால் தணிந்திருப்பேன்!
பனித்துளியாக இருந்தால்,
பகலவனால் பறிக்கபட்டிருப்பேன்!
மனிதனாக பிறந்ததால்,
மண்புகும் நாள்அறியேனே!

எழுதியவர் : சிவகுமார் (7-May-16, 4:14 am)
சேர்த்தது : சிவகுமார் முத்து
பார்வை : 93

மேலே