எந்த நிறத்திலே அழகிருக்கு

கருமை நிறமென்று குயில்,
கூவ கூச்சமுற்றதுண்டா?

நீல நிறமென்று கடல்,
நித்தம் வருந்தியதுண்டா?

நிறமில்லையே என காற்று,
சித்தம் கலங்கியதுண்டா?

உடலில் ஓடும் செங்குருதி,தன்
நிறமாறினால் சங்குருதி!

எந்த நிறத்திலே அழகிருக்கு?
நிறம் மாற நினைப்பதும் எதற்கு?

தன்நிறத்தில் தன்னிறைவுற்றால்,
எல்லா நிறத்திலும் அழகிருக்கு!

எழுதியவர் : சிவகுமார் (7-May-16, 11:22 am)
சேர்த்தது : சிவகுமார் முத்து
பார்வை : 59

மேலே