ஒரு இதயம் உதிர்ந்து போகுதே

நீ தானே நீ தானே...
என் உயிரே நீ தானே...
எனை விட்டு நீ பிரிந்தால்
என் உடல் வெறும் கூடுதானே.....


காற்றை மொழிப் பெயர்த்து
கவிதை விதைத்தேன்...
கண்ளால் நீரைத் தெளித்து
காதலை வளர்த்தேன்.....


இள மொட்டு வந்தது
அது மலராகும் முன்னமே
காம்பு அறுந்துப் போனதே...


விதி செய்த சதியோ?...
என் காதல்
கண் முண்ணே கலைந்தோடுதே.....


கோபம் தந்த மயக்கத்தில்
உன் மேல்
விச வார்த்தைகளை வீசினேன்...
காதல் கசந்து நீ
விலகிப் போகையில்
நெஞ்சம் உடைந்து இருளில் மூழ்கினேன்.....


விழிகளில் வழியுதே கண்ணீர் நதி...
காணாது போகிறாயே ஆசை இரதி...
காய்ந்துப் போனப் பூமி இங்கே ஈரமாகுது...
உன் நெஞ்சின் ஈரம் எங்கே?... போனது.....


பூவாசம் வீசும் சின்னப் பூங்கிளி
எங்கோ... பறந்துப் போகுதே
பூ உதிர்ந்த நார் போலவே
உள் இதயம் வெயிலில் காயுதே.....


விதி செய்த சதியோ?...
என் காதல்
கண் முண்ணே கலைந்தோடுதே.....


கொஞ்சி பேசும் பௌர்ணமி நிலவே
என் மேல் கோபம் கொள்ளாதே...
கொத்தி திண்ணும் கிளி அலகுப் போல
உனதிரு விழிகள் சிவக்குதே.....


இமைகளாய் இணைந்து நடந்த நேரத்தில்
வீசியப் புயல் விலகிச் சென்றது...
கணைகளாய் தூரம் சென்ற நொடிகள்
இளந்தென்றலும் என் இதயம் துளைக்குதே.....


ஓவியம் தீட்டும் போது பார்வை போய்விடில்
அது முழு வடிவம் பெறாது...
என்னவளே எனைவிட்டு நீயும் போகையில்
உடல் இருந்தும் உயிர் மெல்ல சாகுதே......


விதி செய்த சதியோ?...
என் காதல்
கண் முண்ணே கலைந்தோடுதே.....
நீ தானே நீ தானே
என் உயிரே நீ தானே .......

எழுதியவர் : இதயம் விஜய் (7-May-16, 2:36 pm)
பார்வை : 124

மேலே