அன்னையர் தினம் - 08052016
ஆத்திச்சூடியில் அம்மா
அ - அன்பை போதிப்ப வள்
ஆ - ஆதரவாய் அனைப்பவள்
இ - இன்பத்தின் உயரம் அவள்
ஈ - ஈகைக்கு உதாரணமும் அவள் தான்
உ - உதிரத்தால் நம்மை உருவாக்கியவள்
ஊ - ஊற்றாய் பாசத்தை பகிர்பவள்
எ - என்னுள் என்றும் அழியாமல் இருப்பவள்
ஏ - ஏற்றமுள்ள வாழ்வை தருபவள்
ஐ - ஐயத்தை தவிர்க்க சொன்னவள்
ஒ - ஒற்றுமையின் பொருளை விளக்கியவள்
ஓ - ஓராயிரம் இறைவனுக்கு சமமானவள்
ஔ - ஔதடம் (மருந்து) இன்றி நம்மை வளர்ப்பவள்
ஃ - அதே அம்மாவின் ஆத்திச்சூடி ஆகும்