என் அன்னையே

நான் இப்புவியில் பிறந்தவுடன் புன்னைகைத்தவள் இவள்...!
காலமெல்லாம் என் கண்ணீர் துடைக்க என் வரமாய் வந்தவள் இவள்...!
நித்தம் நித்தம் நான் நிதானமாய் நடப்பதை கண் விழித்து கண் செவிக்க பார்த்தவள் இவள்...!
என் கட்டழுகு மேனியை முழுக்க முத்தம் இட்டு ரசித்தவள் இவள்..!
என் கண் உறங்கும் வேலையிலும் கண் இமை கொண்டு காத்தவள் இவள்..!
அன்னையே...! என் ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள் கடந்து போனாலும் என்றும் நீயே என் தேவதை....!