என் அன்னையே 2

நீ என்னை ஈன்றெடுத்த நாள் முதலா நித்தம் நித்தம் உன் வியர்வை என்னும் இரத்தம் சொட்டி காத்தயடி..!
காலமெல்லாம் எனக்கு கஷ்டம் என்ற ஒன்று தெரியாமல் வளர்த்தயடி..!
நீ வலியோடு வாழ்ந்தாலும் உன் வழியை என் விழியோடு எப்போதும் சேர்த்ததில்லையடி...!
என் உடம்பில் இரத்தம் சொட்டும் போதெல்லாம் உன் விழியிலே செங்குருதியை வடித்தாயடி...!
வலி என்று ஒன்று இல்லாமல் உன் மகனை இராஜராஜசோழன் போல் வளர்த்தாயடி..!
என் தகப்பனார் சொல் தட்ட தெரிந்த எனக்கு என் தாயே உன் சொல்லை எப்பொழுதும் தட்ட தெரியவில்லையடி..!

அன்னையே.., ஆயிரமாயிரம் ஜென்மங்கள் கடந்தாலும் நீயே என் தேவதை..!

எழுதியவர் : விமல் திரு (8-May-16, 9:24 am)
பார்வை : 178

மேலே