நீர் இன்றி அமையாது உலகு
உலகின் எல்லா கண்டங்களையும்
சிறிது சிறிதாக தாக்க
ஒரு கண்டம் வளர்ந்து வருகிறது!
அது நீர் கண்டமும் அல்ல! நெருப்பு கண்டமும் அல்ல!
நீர்ப் பஞ்சம் எனும் அபாய கண்டம்!
அதிலிருந்து தப்ப வழி......?
மாநிலம் விட்டு மாநிலம் மாறிக் குடியேறுவதோ
தேசம் விட்டு தேசம் ஓடிக் குடியேறுவதோ
நிச்சயம் அல்ல!
நீர்ப் பஞ்சம் உலகளாவிய பிரச்னை எனில்
எங்கிருந்து எங்கு ஓட முடியும்?
ஒரு தேசத்தை சீக்கிரம் தாக்கும்!
ஒரு தேசத்தை தாமதமாய் தாக்கும்!
வேறுபாடு அவ்வளவே! யதார்த்தம் ஒன்றேதான்!
என்ன செய்யலாம்?
குளம், ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகளை
பாதுகாக்க வேண்டும்!
பிளாஸ்டிக், வீண் ஆன உணவுகள் மற்ற குப்பைகளை
நதிக் கரைகளிலும் நதி நீரிலும் எறிதல் தவிர்ப்போம்!
நீர் நிலைகளை தூர் வார வலியுறுத்துவோம்!
வீடுதோறும் மழைநீர் சேகரிப்போம்!
நீர்ப் பஞ்சத்துக்கு தகுந்த
நீர்ப் பாசன முறைகளை
விவசாயிகளுக்கு அறிவுறுத்தலாம்
விவசாய மேதைகள் கொண்டு!
நீர் கடலில் கலப்பதை தடுத்திடல் வேண்டும்!
உலக வெப்பமயம் ஆதலை தடுத்திடல் வேண்டும்!
ஒரு தேசத்துக்கு இன்னொரு தேசம்
ஆலோசனை பரிமாற்றங்கள் செய்தல் நன்றே!
அரசை மக்களோ மக்களை அரசோ
நீர்ப் பஞ்சத்துக்கு குறை கூறாமல்
அரசும் மக்களும்
பஞ்சம் களையும் முறைகளை
இணைந்து விவாதித்து
இணைந்து செயலாற்றி
நீர்ப் பஞ்சத்துக்கு நாம் கண்டம் ஆவோம்!
இந்த மனப்பான்மையை
மாநில மக்கள் மட்டுமல்லாமல்
தேச மக்கள் மட்டுமல்லாமல்
உலக மக்களே குறிக்கோளாய் கொண்டு விட்டால்
செவ்வாயில் ஏன் நீர் தேட வேண்டும்?
சந்திரனில் ஏன் நீர் தேட வேண்டும்?
நீர்ப் பஞ்சம் இல்லாத
புதியதோர் உலகம் செய்வோம்!