நீர் இன்றி அமையாது உலகு

வான் புகழ் வள்ளுவர்
வான் சிறப்பை விளக்குகின்றார்
"நீர் இன்றி யாரே உலகில் வாழ்வார்?
நீருக்கு முக்கியம் மழையன்றோ! எனின்
மழையின்றி உயிர் வாழ முடியுமா?" என்று;.

எனவே
பெய்த மழை நீரை பாதுகாப்போம்!
புதிய மழை நீரை சேகரிப்போம்!
மழை நீர்தான் உழவுக்கு ஆதாரம்!
உழவுதான் பசுமை உலகத்துக்கு ஆதாரம்!
பசுமை உலகம்தான்
நாம் கனவு காணும்
புதியதோர் உலகம்!
பசுமை உலகம்தான்
பெய்த மழைநீரையும்
பாதுகாக்கும்!
உழவர் உணவுப் பொருள் விளைவிக்க
விளைவித்த உணவை உண்ணும்
மற்ற தொழில் செய்வோர்
உணவை உழைப்பாய்
வெளிக் கொணர
அனைத்து தொழில்களும் வளர்ந்து
பொருளாதாரத்தை மேம்படுத்தி
தேசத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்ல
அப்போது புரிந்து கொள்வோம் .........
நீரின்று அமையாது உலகென்று!

எழுதியவர் : ம கைலாஸ் (8-May-16, 6:24 pm)
பார்வை : 589

மேலே