அம்மா நாடு ஆகும் நாள் எந்நாளோ
மக்கள் வரிப் பணத்தில் மக்களுக்கு வழங்கப்படும்
விலையில்லாப் பொருட்களில்
அம்மா படம் ஒட்டப்பட்டிருக்கும்.
மக்கள் வரிப் பணத்தில் அரசு
நிறுவனங்கள் தயாரித்து
விற்பனை செய்யும் நிலையங்களுக்கும் பொருள்களுக்கும் அம்மா பெயர் சூட்டப்பட்டிருக்கும்.
அம்மா ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டால்
தமிழ் நாடு அம்மா நாடு ஆகுமோ என்னவோ?
அம்மம்மா,
ஜோதிடர்களிடந்தான்
ஆருடம் கேட்கவேண்டும்.
இல்லையென்றால்
தரையில் படுத்து
அவரை வணங்கும்
மாண்புமிகு மனிதர்களிடந்தான்
என்ன நடக்குமெனபதைக்
கேட்டறிய வேண்டும்.