வெற்றி நம்மாலே
என்ன என்ன அறிக்கைகள்
வண்ண வண்ண வார்த்தைகள்
காது குளிர குளிரக் கேட்கிறோம்
நிஜமாகுமா நிழலாகுமா/
ஈழத் தமிழர் நிலை சற்றேனும்
நகர்ந்துதான் செல்லுமா /
உதட்டளவில் எழுத்தளவில் மட்டுமா/
இல்லை இல்லை நம்பகமானது
நம்பித்தான் ஆக வேண்டும்,
, நம்பி நம்பி வாக்குகளை
அள்ளி அள்ளி கொடுத்தோம் அன்று
கிள்ளி கிள்ளி தந்தார்கள் வரங்களை
திருப்தி கொள்ள வேண்டியது தான்
மனதளவில் வெறுப்பும் விரக்தியும்
வெந்துதான் புழுங்குகிறான் மனிதன்,
இனியும் அப்படி நடந்து விடக் கூடாது
தெரிந்து தெரிந்து தேர்தலில்
ஒருவரை தேடி தேடி ஜெயிக்க வைத்து
அந்த நல்ல தலைவன் ஆளவேண்டும்
நம்மை எல்லாம் வாழ வைத்து
நம் சிரிப்பில் அவன் சிறந்து
நாம் வாழ்த்த அவன் கோல் உயர வேண்டும்
அந்த நல்ல தலைவன்
நம்முன்னே நடமாடுகின்றான்
நாமே கண்டு கொள்ள வேண்டும்
அதுவே நமது வெற்றி
இத் தேர்தலில் வெற்றி நம்மாலே ,
அது நம்மால் மட்டுமே ,