தமிழன் பெருமை
மாத மும்மாரி பொழியும்
காலை கூவி விடியும்
வாயில் மெழுகும் சாணம்
நச்சுயிர் போக்க வாகும்
வாயில் மேற்க் கோலம்
கண்ணொடு ஈயெறும்புக் காகும்
உணவாக்குதல் பொருட்டு நீர்
கொணர்ந் தருவதுவே ஊருணி
புறவழுக்கு அகற்ற நீர்
கொணர்ந் தருவதுவே குளம்
ஏரிட்டுப் பல பொருள்
படைக்க உதவுவதோ ஏரி
வடக்கிருந்து வாசமொடு வீசி
வருவதுவோ வாடை யானது
தெற்க்கிருந்து தெம்மாங்கு பாடி
வருவதுவோ தென்ற லானது
மேற்க்கிருந்து மென்மை யோடு
வருவதுவோ கோடை யானது
கிழக்கிருந்து குதித்தோடி வருவதே
கொண்டல் என்று ஆனதே
நாம் பெருமை மறந்த
வீணர் என்றாக லாமோ
நம் பெருமை அறிந்து
வாழ்வதே சீர்வாழ்வு தமிழனே !
- செ.கிரி பாரதி.