தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல் - 52 = 99
"ஓடும் மேகத்தில்
நிலவே மிதந்துப் போகிறாய்
காதல் மோகத்தில்
இன்பக் கனவு காண்கிறாய்…!"
பனிநீரை பிடித்து
மேனிமீது தெளித்து
கனிரசம் குடித்து
காம நாடகம் நடத்து..!
பூவிதழை வருடி
புன்னகையை திருடி
புதுவீணை மீட்டு
பூங்கதவை சாத்து..!
கார்முகில் சோலை
கன்னி திரிந்த வேளை
காண வந்தான் காளை
கண்கள் புரிந்தது லீலை..!
மங்கை ஆடை விலகி
மாங்கனிகள் குலுங்கி
மாமாங்கம் செய்கின்றது
மன்மத மேளம் முழங்கி..!
சிறுமலை முகை
சிங்காரியின் சிகை
சிருங்காரம் பண்ணாத
செந்தூரப்பூ வகை..!
காப்பிய ராணி
என் கதைக்குள் வா நீ
உன்னை வைத்து
நான் படைப்பேன் தேம்பாவணி!
தேரோடும் வீதி
தோகையே நீ ஆடி
பாராட்டுப் பத்திரத்தை
பெற்றுக்கொண்டுப் போடி..!
விரகம் நாம் கொண்டு
விடுவோம் காதல் படகு
விடியும்போதும் விடாது
விரகதாப மூடு..!