உடல் தானம்

அழகின் ஆழத்தில் மானுடம் தழைத்த போது
மரணம் எனும் படகு ஏறி மறு கரை அடைந்தேன்--உடல்!
இன்னொரு முறை வாழ்கிறேன்-உயிர்!
மண்ணுக்குள் மக்கும் குப்பையாய் மாறேன்!
மரஞ்செடி கொடிகளும் நானும் வேறு!
தலை முதல் கால் வரை உயிர் கொடுக்க வல்லேன்-உடல் தானம்!
நெகிழியுடன் ஒன்றாக அந்தம் ஆவேனோ!!
கருவிழிகளும் நுரையீரலும்!மண்ணீரலும் இருதயமும் !சிறுநீரகமும் ..தோலும்
நமக்கு பின்னும் வாழட்டுமே:
இன்னொரு உடலில் பிரிதொரு உயிராய்!உடல் தானம் செய்வீர்-உயிர் கொடுக்கும் அன்னையாவீர்.......

எழுதியவர் : (9-May-16, 9:27 pm)
Tanglish : udal thaanam
பார்வை : 75

மேலே