மருத்துவப்படிப்பும் நுழைவுத்தேர்வும்
விருப்பப்பட்டவர்கள் எல்லாரையும்
மருத்துவப்படிப்புக்கு அனுமதிச்சாத்தான் என்ன?
பாஸானால் எத்தனை டாக்டர்கள் நமக்கு கிடைப்பாங்க?
பாருங்களேன்,
போன வாரம் தலைமை நீதிபதி
பிரதமர் முன்னாடி அழுது கேட்டிருக்கிறாரு:
"நீதிபதிகள் பத்தாததுனால தான் மூணு லட்சம் கேசு இன்னும்
முடியாம இருக்கு.!"
நம்ம நாட்டு வக்கீலுகளை நீதிபதி ஆக்காம இருக்கிறதும்
நம்ம ஊரு நர்சுகள் நிறைய பேரு 'பாரின்' போறதும் எம்புட்டு பெரிய தப்புங்க!
வாங்க நாம இனி முறையிடுவோம்?
வக்கீலுக எல்லாம் நல்ல அனுபவசாலியா இருந்தா
அவங்க எல்லாம் இனி ஜட்ஜ்-ங்க!
நர்சுக எல்லாம் நல்ல அனுபவசாலியா இருந்தா
அவங்க மட்டும் தானுங்க இனி டாக்டர்ஸ்.!
இப்படித்தான் தீரனும் இந்த மருத்துவப்படிப்புக்கு இருக்கிற டிமாண்டு.
என்னங்க நான் சொல்றது?