வலியோடு வெற்றி போட்டிகவிதை

வெறுப்பில் பிறந்தான் , கால்புள்ளியாய் ,
மறுப்பில் வளர்ந்தான் ; அரைபுள்ளியாய் ;
தேவைகளற்று போனான் : முக்கால் புள்ளியாய் :
படிப்புக்கு வைக்கப்பட்டது . முற்றுப்புள்ளிதான் .

அவன் எதிர்காலமோ ? கேள்விக்குறியாய் ?
ஆனாலும் அறிவின் வேட்கை ! உணர்ச்சிகுறியாய் !
குடும்பம் அவன் பொறுப்பில் ஒற்றை ' மேற்கோளாய் '
மாலை வகுப்புக்கு செல்கிறான் " இரட்டை மேற்கோளாய் "

அடைப்புக்குறியாய் () ஏழ்மையில் துவளாது ()
வரலாற்றுக்குறியாய் :- மாற விழைகிறான் :-
கூட்டல் குறியாய் + அவன் வாழ்வை செதுக்குவான் +
நட்சத்திரக்குறியாய் * வெற்றியோடு உலாவருவான் *

Pic courtesy- journals.worldnomads

எழுதியவர் : சுபா சுந்தர் (9-May-16, 8:07 pm)
பார்வை : 646

மேலே