விவசாயி-2

உழுதவனுக்கும்
அறுத்தவனுக்கும்
அளந்தது போக
மிச்சம்
மூட்டை நெல்லும்
வைக்கோல் போரும்தான்னாலும்
சந்தோஷமாதானிருந்தோம்…
இப்போ…
தண்ணிக்கும்,
தண்ணிக்கும்
கொடுத்தது போக
மிச்சமிருக்கிறத
வட்டிகட்டிப்புட்டு
வீடு வந்தா
மறுபோகம் என்ன அண்ணேங்கிறான்
பக்கத்துவீட்டு மாடசாமிமகன்
சரி…
கடலையபோடுவோம்…விட்டத புடிப்போம்
அம்மாவோ,
அய்யாவோ,
தளபதியோ
யாருக்குத்தெரியும் நம்ம கணக்கு…

எழுதியவர் : ரிஷி சேது (9-May-16, 7:14 pm)
பார்வை : 81

மேலே