இன்பத்தின் தத்துவம்
தன்னை
தாழ்துகிறவன்
உயர்வடைவானாம்
என்னை
தாழ்த்திப் பார்த்தேன்.
எவன் எல்லாமோ
உயர! உயர!
உலகினில் நாம்
உயர்வடைய
நம் முகம் தேவை.
நாம் நாமாக
இருந்து விட்டால்
எவன் வாயும்
நமக்கு உறவே...!
நான் என்பது
சுயநலம்தான்.
சுயநலத்தின்
பரிமாணம்தானே
பொது நலம்...!
சுயமாக தன்னை
நேசிக்கா ஒருவன்
எப்படி பிறரை
நேசிக்க முடியும்?
பூஜிக்க முடியும்...?
இப்போது தான்
என்னை நான்
நேசிக்க கற்றுக் கொண்டேன்.
எத்தனை ஆனந்தம்
எனக்குள்...!
வாழ்க்கை என்பது
இருளும் ஒளியும்
மாறி வீடமைக்கும் கூடு...!
இன்று சிரித்தவன்
நாளை அழுததையும்,
இன்று அழுபவன்
நாளை சிரிப்பதையும்
கண்டு இருக்கிறேன்...!
நாம் நல்லவனாக
இருக்க முயல்வோம்
அழுகை நம்மை விட்டு
அடுத்த தேசத்திற்குப்
போய்விடும்...!
மாறுகண் தோட்டம்
கொன்டவன்தான் மனிதன்.
நாம் சுயநலத்தில்
நிற்போம்
உலகம் நம் சுண்டு விரலில்...!
நாஞ்சில் இன்பா