சிந்துப்பாடல் -- காவடிச் சிந்து வகை -2 -- 3
தாய்மையைப் போற்றிடு வாயே -- உயர்
தாய்தமிழ் பேசிடு வாயே -- வாழ்வில்
தரமேஉயர் பலனேமிகும் நலமேதரும் உளமேஎழில்
தாங்கும் -- நிலை ஓங்கும் .
வாய்மையே நின்றிடு மெங்கும் -- இனி
வாய்த்திடும் சொந்தங்கள் தங்கும் -- நல்ல
வரமேதரும் உறவேநிகர் செயமேவரும் விதியேஎனும்
வாய்மை -- புகழ் தாய்மை .