கேளாயோ மனமே

என்..
தடுமாறி தவிக்கும் நெஞ்சம்
நிலையற்று போனது கொஞ்சம்!!
கல் எறிந்த குளமாக
கலங்கமுற்று கிடக்கிறது!!

சிந்திக்க முயலாமல்,
சினம் கொண்டு சீரிடுதே!
சொல் பேச்சை கேளாமல்,
நல் வாழ்வை இழந்திடுதே!

மனமே மனமே கேளாயோ..
உண்மை உரைப்பேன் கேளாயோ??

சினம் என்னும் தோழமையால்..
சீரழியும் உன் வாழ்க்கை!!

செல்வத்தை தேடி சென்று,
இன்பத்தை தொலைக்காதே!!

பெற்றோரை மறவாதே!
கடமையிலே தவறாதே!!

நன்மக்கள் நட்போடு,
தைரியமாய் நடைபோடு!

உருவத்திலே எளிமை கொள்!
உள்ளத்திலே அமைதி கொள்!

சிந்தனையில் தெளிவு கொள்!
செயல்பாட்டில் பொறுமை கொள்!!

மனதினிலே அன்பு கொள்!
மன்னித்திடும் பண்பு கொள்!!

உன் அழிவிற்கு அழைப்பிதழ் தான்
ஆசை என்று அறிந்து கொள்!!

இது தான் உண்மை என் மனமே..
உணர்ந்தால் நன்மை நம் வசமே!!

எழுதியவர் : நேதாஜி (9-May-16, 4:58 pm)
பார்வை : 96

மேலே