தேர்தல்

இது ஒரு திறந்த வெளிப் பல்கலைக்கழகம்
இங்கு எல்லோரும் தேர்வு எழுதலாம்
அடிப்படைக் கல்வி தேவையில்லை
இதில் விநோதம் என்னவென்றால்
இங்கு திறமைசாலிகள் திணறுவதும் உண்டு
சாமானியர்கள் சாதிப்பதும் உண்டு
படித்தவர்கள் தோற்பதும் உண்டு
படிக்காதவர்கள் வெற்றி பெறுவதும் உண்டு
இங்கு தேர்வில் வென்றவர்கள்
மக்களின் தலைவிதியை எழுதுவார்கள்
ஒரு காலத்தில் இப்பல்கலைக்கழகம்
தூய்மையின் இருப்பிடம்
இன்றோ பணமும் சாதியும் மதமும்
வெற்றியைத் தீர்மானிக்கும் எஜமான்கள்
வீழ்ந்தவர்களுக்கு இது சாக்கடை
சாணக்கியர்களுக்கு இது சதுரங்கம்
வாக்காளர்களுக்கு இது தலை எழுத்து
தமிழ் அகராதியில் இது அரசியல்!

எழுதியவர் : மோகனதாஸ் (10-May-16, 10:27 am)
Tanglish : therthal
பார்வை : 202

மேலே