நீர் இன்றி அமையாது உலகு - கவிதை ஸ்ரீராவ்

நீர் இன்றி அமையாது உலகு

நாட்டில் ஒரு விஞ்ஞானி ஒரு மேதாவி இருந்தால்கூட போதும்
ஒரு விவசாயி ஒரு தொழிலாளி போதுமா?

வாழும் நாள்வரை உழைப்பவனுக்கு இல்லை
வாழ்நாள் சாதனை விருது.

கோடிகளில் ஒருவனாக இல்லாமல் கோடிக்கணக்கில்
இருப்பதனால் உழைப்பாளி அருமை உலகிற்கு தெரியவில்லையோ?

தலைகணம் இல்லை தலையில் எப்பொழுதும்
கணத்தை சுமக்கும் தொழிலாளிக்கு.

மாசற்ற கைகள் கறைபடியும் உழைப்பினால் மட்டுமே
ஊதாறிதனத்தால் அல்ல.

என்றேனும் நீர்(தண்ணீர்) இன்றிக் கூட உலகு அமையலாம் ஆனால்
நீர்(தொழிலாளி) இல்லாமல் அமையாது உலகு.

எழுதியவர் : shreerao (10-May-16, 11:23 am)
பார்வை : 528

மேலே