உயரம் -சுஜய் ரகு

மாடிப்படிகளில் அமர்கிறோம்
சற்று உயரத்தில்
விரும்பி அமர்கிறாய் நீ

உயரத்தின் விருப்பம்
இயல்பாகவே
காதலுக்கு உண்டு

தோள்கள் உரச
நாம் உயரம் அளந்திருக்கிறோம்

சொற்களின் கதைப்பை
உயரப்படுத்த
முயன்றிருக்கிறோம்

காதலாகவோ அல்லது
கடுஞ்சொல்லாகவோ
அது மேலெழும்பியிருக்கிறது

எல்லோருக்குள்ளும் ஒரு
நினைப்பு
ஏதோவொரு வகையில்
தாம் உயர்ந்திருப்பதாக

உயரம் சார்ந்தெழும்
காதலும் உண்டு
அதன் தீரத்திலுடைந்த
காதலும் உண்டு

உன்னிடம் பேசிக்கொண்டே
நான் வானத்தின் உயரத்தை
அளக்கிறேன்

அது என் காதலைப்போல்
அவ்வளவு உயரம் இல்லை

எழுதியவர் : சுஜய் ரகு (10-May-16, 12:41 pm)
பார்வை : 91

மேலே