பதம் பார்க்கும் பள்ளி நட்பு ! ! ! கல் விட்டெறியும் கல்லூரி நட்பு ! ! !
![](https://eluthu.com/images/loading.gif)
எட்டு கட்டம் கொண்ட
நாள் நட்சத்திரம் பார்த்து
முடிக்க வேண்டிய இருக்கு
கட்டாய கல்யாணத்துக்கும்
பின்னே பெறுவதை அறிந்து
முன்னே செய்யும் உடன்பிறந்தோரும்
பெருமை பீத்தி கொள்ளும்
பெற்றோர் வழி உறவினர்களும்
நல்லது நடந்தால் நாடகமும்
தீமை நடந்தால் தீர்க்கமும்
காத்திருந்து கைதட்டி மகிழ்ச்சி
கொள்ளும் நமது ஊரினமும்
அத்தனையும் ஒருபுறம் இருக்க
ஆயிரம் ஆயிரம் கைகளாய்
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
எந்த ஒரு உறவும் இன்றி
எனக்காக வருந்தி கொண்டும்
எனக்காக வருத்தி கொண்டும்
நாள்தோறும் நலம் கொள்ளும்
நல்மனமுள்ள நட்பு பெரிது
எட்டி உதைக்கும் ஏளனங்களை
பதம் பார்க்கும் பள்ளி நட்பு
கட்டி போடும் கல்நெஞ்ச காரர்களை
கல் விட்டெறியும் கல்லூரி நட்பு