இன்னும்

நம் மன மௌன
ஆதிக்கத்தில்
நம்மைப் பரிமாற
மறுத்தோம்.

நம் காதல்
வெளிப்படாமலேயே
நசுங்கிப் போனது.

அச்சம், தயக்கம்,
வெட்கம், கூச்சம்,
சூழ்நிலை
இதில் எது?
நம் காதலுக்கு
எதிரியானது?

நாம் சந்திக்கிற போது
ஏற்படும்முகத்தின் சுடர்
மட்டும்தான்
நம் காதலை
இன்னும்
கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

எழுதியவர் : கனவுதாசன் (11-May-16, 9:22 pm)
Tanglish : innum
பார்வை : 101

மேலே