மனைவி அமைவதெல்லாம் -- இன்னிசை வெண்பாக்கள்

மனைவி அமைவதெல்லாம் மாசிலா மண்ணின்
வினையாம் தினந்தோறும் வீட்டினி லின்பம்
துணையால் வருகிற தூய்மை அனைத்தும்
மனையாள் முகத்தின் மரபு .


மாற்றங்கள் வேண்டும் மகத்துவமா யில்லறத்தை
போற்றுங்கள் நெஞ்சத்தில் பொன்றாது நின்றிடவும்
சாற்றுங்கள் மொத்தமாய் சாட்சியாம் காதலை
ஏற்றுங்கள் தீபத்தை ஏற்று .


எழிலாய் மனங்குளிர ஏற்றமிகு இல்லம்
அழிவே இனியில்லை ஆக்கத்தில் எங்கும்
பொழிலாய் மனையாளும் போந்திடுவாள் நாளும்
விழியாய் கனவில் விருந்து


மரபின் மனமே மனைவியின் உள்ளம்
தரத்தில் சிறப்பாம் தருகிற உண்மை
உரமாய் இருப்பாள் உறவாய் வருவாள்
சிரமாய் அவளது சீர் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-May-16, 10:31 pm)
பார்வை : 340

மேலே