எங்கே விட்டு சென்றாய்....
கவிதை என்றேன்...
இல்லை அது உன் பெயர் என்றாய்...
மின்னல் என்றேன்....
இல்லை உன் பார்வை என்றாய்....
மழை என்றேன்...
இல்லை உன் சிரிப்பு என்றாய்...
என் பெயர் சொன்னேன்....
உன் சுவாசம் என்றாய்....
காதல் என்றேன்....
என் பெயர் சொன்னாய்...
நீ என்றால்...
நான் என்றாய்....
திருமணம் என்றேன்...
அப்பா அம்மா என்றாய்.....
அவர்களை கேட்டேன்....
வேலை என்றார்கள்....
நமக்காக உன்னை!
விட்டு சென்றேன் வேலைக்கு....
இதோ இன்று தேடுகிறேன் உன்னை....
எங்கே விட்டு சென்றாய் என்னை....