பசுமை காலங்கள்
இயற்கையை அழிக்க
பசுமை காலம் வெளிரிப்போனது
மரங்களை வெட்ட
பசுமை காலம் பயந்துபோனது
நீர்நிலைகளை மாசுபடுத்த
பசுமை காலம் கலங்கிபோனது
காற்றுவெளியை கசடாக்க
பசுமை காலம் வெறுத்துப்போனது
அதனால்
நமக்கு கிடைத்த பரிசுகள்
நிலங்கள் வெடித்துபோனது
வானம் பொய்த்துப்போனது
வெயில் வாட்டிஎடுக்குது
பூமி ஆட்டம்போடுது
கடலே கரைக்கு வந்தது
மாற்றம் வேண்டுமெனில்
பசுமை காலத்தை மீட்டெடுப்போம்
வரும் தலைமுறைவாழ வழிவகுப்போம்
இல்லையெனில்
தலைமுறை எனும் சொல் மட்டுமே வாழும்...