எனக்காக அவள்

கொழுந்து இளம் தேனே கொண்டையில் பூ சூட
கொல்லாத வரம் நான் பெற்றேன்
கொண்டாடி நாம் மகிழ நேரம் வாய்க்கும்,
கூந்தள் தெளித்து குதுகலம் கொள்ள
கூப்பிட்டவன் நான் வருவேன்
குமரி அவள் காத்திருக்க
என் கடை விழித்தான் கடிதம் போடுதே ...
காதோரம் கதை சொல்லும்
கை ரேகைக்குள் என் உயிரோ,
களவாடதான் உன் ஆசை
நிலவோட நான் வருவேன் – நீ
எதிர் பார்க்கும் நேரத்திலே
தூங்காத மனதிற்கு துன்பம் தர நான் மறுப்பேன்
துயிலாடும் உன் விழிக்கோ
மயில் போல கை தோகை விரித்து
பின் நின்று கண் மறைத்து காணாத காட்சியென
உன் முகத்தை நான் ரசிக்க,
தேயாத உன் ஏக்கம் - என்னை
கொன்று விடவும் சம்மதமே.........

எழுதியவர் : ஆனந்த். க (13-May-16, 12:53 pm)
Tanglish : enakkaga aval
பார்வை : 162

மேலே