மனச்சுமைகள்

அவசர உலகில்
ஆயிரம் பிரச்சினைகள்
அலுவலகத்தில் வேலைப்பளு
அதிகாரிகளின் அச்சுறுத்தல்
அலைபேசிகளின் அலறல்
கடன் காரர்களின் தொல்லை
போக்குவரத்து நெரிசல்
வாகனங்களின் இரைச்சல்
பட்டுப்புடவைக் கேட்டு
ஆத்துக்காரியின் குடைச்சல்
பண உதவிகேட்டு வாசலில்
காத்திருக்கும் உறவுகள்
சோர்வில் களைத்து
நான் கட்டிலில் சாய்ந்தபோது
அப்பா என்று குரல் கொடுத்து
என் நெஞ்சில்தாவி அணைத்து
கன்னத்தில் முத்தமிட்டாள்
என் ஐந்துவயது குழந்தை
அந்தோ பனிபோல் கரைந்தன
என் மனச்சுமைகள் எல்லாம்