வெறும் எலும்பு

ஐயெட்டு ஆண்டுகள் கழித்த இல்லறத்தில்
லட்டு போல் எட்டு ஆண் பிள்ளைகள் பெற்றவள்
கட்டுக் கிழத்தியாய் பட்டெனப் போய்ச் சேர்ந்தாள்.
மூன்றாம் நாளில் துக்க நிவர்த்தியென
சுற்றமும் நட்பும் சூழ பிரார்தித்து
அனைவரும் ஆங்கே உண்ண அமர்ந்தனர்.
தனது இலையில் பரிமாறப்பட்ட
பிரியாணியில் வெறும் எலும்புதான் உள்ளதென
கிழவியின் கணவர் சொல்வதைக் கேட்டு
தலையில் அடித்துக் கொண்டனர் மக்கள்.

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (13-May-16, 1:15 pm)
Tanglish : verum elumbu
பார்வை : 95

மேலே