காவடிச்சிந்து -வகை2
ஈதலைப் போற்றிடு வாயே - நாளும்
இன்பத்தைச் சேர்த்திடு வாயே - என்றும்
இனமோங்கிட இயல்பேபடி
வளஞ்சேர்த்திட வழியாமதில்
ஈர்ப்பாய் - வளம்
சேர்ப்பாய்
சாதனை மேவிட நீயே - இனி
சாதகம் செய்திடு வாயே -நாளும்
சதமேதரு வழியேயொரு
இதமேதரு நிலையாமதில்
சகியே - இன்பம்
சுகியே
கவிதையாக்கம் ; திருமதி. மஞ்சுளாரமேஷ்