திருவள்ளுவநாயனார் திருவாய்மலர்ந்த ஞானவெட்டியான்
அண்ட பிண்ட நிறைந்துநின்ற வயன்மால் போற்றி
யண்டபரிபூரணத்தி னருளைப்போற்றி
மண்டலஞ்சூ ழிரவிமதி சுடரைப்போற்றி
மதுரதமி ழோதுமகத் தியனைப்போற்றி
எண்டிசையும் புகழுமெந்தன் குருவைப்போற்றி
யிடைகலையின் சுழிமுனையின் கமலம்போற்றி
குண்டலிக்கு ளமர்ந்தவிநா யகனைப்போற்றி
குகமணியின் தாளிணையைப் போற்றிபோற்றி .