அமிர்தம் என்னவென்று அறிய
பாலை புகட்டுவாள்
கூடவே பண்பையும்
அன்புக் காட்டுவாள்
அதனுடையே கண்டிப்பும்
ஆதரவை நல்குவாள்
வழியிலேயே சுதந்திரமும்
யாவையிலும் இருப்பாள்
கண்டும் காணா மாலேயும்
தள்ளியிருக்கிறாள் என்றாலும்
தகமையில் நிற்பாள்
தன மகன் என்பதில் பெருமை
உள்ளுக்குளேயே அடங்கி
மகனைப் பார்த்து பூரிப்பாள்
கண்ணாலே காட்டுவாள் பரிவை
அமிர்தம் என்னவென்று அறிய
கண் குளிர காண் தாயை .