அற்று, அற்று

மலிந்து கிடந்தன
பொருட்கள்
தேடுவாரற்று .

பிரிந்து வாழ்ந்தன
உறவுகள்
ஆதரவற்று.

வாடித் தெரிந்தன.
பயிர்கள்
நீர் ஆதாரமற்று.

பாடித் திரிந்த
குயில்
நோயுற்று

ஆடி அழிந்த
மனிதன்
கேட்பாரற்று.


குடித்து குலைந்த
குடிகாரன்
காப்பாரற்று

கட்டுக்கடங்காத
மகன்
பிறபானற்று

அற்று அற்று
ஓதும் போதே
கவனம் சற்று.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (12-May-16, 7:46 pm)
பார்வை : 65

மேலே