அறியாமை எனலாம் முடிவாகவே

செயலில் என்ன விதம்?
நன்று தீயது என்பது மீதம்
நோக்கம் என்பது நெறி
சரியோ தப்போ என்பது
ஒரு வெறி.

எடுத்தக் காரியம்
முடிய வேண்டும்
சீக்கிரத்தில் என்பதே
ஒரு கோட்பாடு.

அதில்லாமல் இழுப்பதும்
வலிப்பதும் தடுப்பதும்
ஓர் எண்ணம் கெட்ட
என்பதை விட கொடுமை.

நேரம் தவறினால்
பாலும் புளித்து விடும்
கொதி நீரும் ஆறி விடும்
திரியும் எரிந்து விடும் .


ஏதும் செய்யாமல்
வாளாவிருந்து எல்லாமே
செய்வது போல்
காட்டுவது நடிப்பு.
பகட்டான் ஒன்று.


அல்ல அல்ல!
அது ஒரு தீய எண்ணம்
இல்லாவிடில்
ஒரு அறியாமை
எனலாம் முடிவாகவே

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (14-May-16, 2:40 pm)
பார்வை : 491

மேலே