எது முக்கியமோ அதை வளர்த்துங்கள்
உன் பாசத்தை
கண்டுகொள்ளாமல்
தேடுகிறேன்
அன்பை
நந்தினி
உன்னை
உதறி தள்ளி விட்டு
உளருகிறேன்
யாரும் இல்லை
எனக்கு என்று
என் கண்களில்
பார்வை குறைபாடு
என நினைக்கிறேன்
ஊற்று நீ
இங்கிருக்க
கானல் நீரை
பிடிக்க ஓடுவதால்
எதுவும் எளிதில்
கிடைத்து விட்டால்
அதன் மதிப்பு தெரியாது
அருகில் இருக்கும்
எதையும் யாரும்
கண்டுகொள்வதே இல்லை
நந்தினி
நந்தினி
நான்
School படிக்கும் போது
எப்டி இருந்தனோ
அப்டியே
தான் இருக்கன்.
அப்டியே
தான் இருப்பன்..
நமக்கு சகாயமா
கிடைக்கும்
பலவும்
மற்றவர்களுக்கு (ஒரு சிலருக்கு)
சாகும் வரையிலும்
கிடைப்பதே இல்லை.
அது அன்பாக இருந்தாலும் சரி.....
இது உனக்காக
மட்டும்
எழுதவில்லை
நந்தினி
என் மனதிற்காகவும்( மக்களுக்காகவும்)
தான்..
~ பிரபாவதி வீரமுத்து