மனம் அட்சயபாத்திரமானது --முஹம்மத் ஸர்பான்

நதிகளின் கல்லறையில் ஒளிகொடுக்கும் கதிரவன்
மதி போன்ற உன் புருவத்தில் பருவாக யாசித்தது..,
முத்தங்களும் மலர்களும் காதலித்த கன்னக்குழியில்
தனிமையின் கனவுகளும் நினைவாக தாகித்தது...,
வெள்ளாடை மூடிக் கொண்ட பொன் தோள் மேனியில்
கவிதைகளும் கதைகளும் மூங்கில் யாத்திரையானது,
என் மீசை முடியை போன்ற கருமையான கூந்தலில்
சிக்கிக் கொண்ட அவள் விரலில் மனம் அட்சயபாத்திரமானது.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (14-May-16, 5:56 am)
பார்வை : 80

மேலே