மனித உணர்வு

தூண்டிலில் சிக்கிய
மீன்கள் ஒன்றைஒன்று
பார்த்து பேசியதாம்
நாம் எவ்வாறு
தப்பிக்கலாம் என்று

சிறையில் இருந்த
மனிதர்கள் ஒருவரைஒருவர்
பார்த்து யோசித்தார்களாம்
மற்றவனை சிக்க வைத்து
நாம் எவ்வாறு
தப்பிக்கலாம் என்று

மனித உணர்விலே
எத்தனை சுயநலம்
எத்தனைப் பேராசை

இத்தனையும் தங்கும்
பூமித் தாயை
போற்றுவோம் !!!!!!!!!!!!!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (14-May-16, 7:50 am)
Tanglish : manitha unarvu
பார்வை : 217

மேலே