ஏற்க மறுக்கின்றாய்

வார்த்தைகளில்லாமல்
மௌனங்களில்
கவிதை எழுதுகிறாய்...
கன நேரத்தில்
கண்களால்
காதல் தூவுகிறாய்...
புன்னகையில்
இசை மழையாய்
இதயம் நிறைகிறாய்...
கடைவிழியில்
திகட்ட திகட்ட
காதல் ஊட்டுகிறாய்...
சுடிதாரின் துப்பட்டாவிற்கு
வானவில்லை
வசிமாக்குறாய்...
குறுஞ்செய்திகளில்
தினம்தினம்
கொலைகள் செய்கிறாய்...
காலையில்
ராசிபலனை பார்க்கிறாய்...
ஞாயிறுகளில்
தேவாலயமும் செல்கிறாய்...
சத்தமில்லாமல்
தனுஷையும்
வைரமுத்துவையும் ரசிக்கியாய்...
எனக்காக
அஜித்தையும்
யுவனையும் பிடிக்குமென்கிறாய்...
முத்தங்களில் சத்தமெதற்கு
என்று சண்டை போடுகிறாய்...
ஆப் ஆயிலில்
ஓவியம் செய்கிறாய்...
இவையெல்லாம் இப்படியே
தொடர வேண்டுமென
தினமும் வேண்டுகிறாய்...
ஆனால்
நான் சொல்லும்
கவிதையை மட்டும்
ஏன் கவிதையன
ஏற்க மறுக்கின்றாய்...

எழுதியவர் : கோபி சேகுவேரா (14-May-16, 12:51 pm)
பார்வை : 94

மேலே