சோம்பேறி மல்லி
பருவம் டாட்
******************
என் கனவுகளுக்குள்
அவளை துணைசேர்த்திருக்கவேண்டாம்
என் பருவம் ம்ம்ம்
சிறு குழந்தையாகவே இருந்திருந்தால் போதும்
பூக்களின் வாசனை
பெண் வாசனை என்பதை
என் வயது அறிந்திருக்கவேண்டாம்
நான் வளர்ந்துகொண்டிருக்கும்
மாற்றம் எனக்குள்ளேயே நடந்திருக்கலாம்
எப்போதும்போல
அவள் என் முன்னால்
ஆடைக்கலைத்து சரி செய்திருக்கவேண்டாம்
நாங்கள் பன்னிரெண்டாம் வகுப்புவரை
எத்திவிட்டப்பின்னாலும்
எப்போதும் அவள் அணியும்
என் சட்டையில்
இப்போதெல்லாம் என் ஆண் வாசம்
முதிர்ந்திருக்காமல் போயிருக்கலாம்தான் ,,
அவள் அந்த கள்ளப்பார்வையை
பார்க்காமல் போயிருப்பாள்
அவள் எப்போதும் அணிகிற
குட்டைப்பாவாடையின் கீழளவு
முட்டிக்குமேல் குறைந்திருக்கிறது
எனக்குள் அக்னி
கொழுந்துவிட்டு எரிகிற
இந்த பருவத்தில்
எல்லா சமயமும் பிடிப்பதைபோல்
கீழே விழுந்த நோட்டுப்புத்தகத்தை எடுக்க
அன்று அவள் என்
கைய்யைப்பற்றியிருக்க வேண்டாம்
இடுப்பின் சட்டை பொத்தான் அவிழ்ந்து
அவள் கொப்புள் தெரிகிறது
வெறும் மௌனங்களாலான மதில் சுவரை
உலர்ந்த உதட்டைத் தடவும்
எங்கள் நாவுகளின் மூச்சு
தடை உடைத்திருக்கவேண்டாம்
ம்ம் என் முதல் மூச்சு
நீண்டு வளர்ந்த அவள்
முன்கழுத்து நரம்புகளில்
ஸ்பரிசித்திருக்கவேண்டாம்
எங்கும் தனியாய் இருவரை யாரும்
விட்டுப் போய்விடுவார்களோ
என்கிற எங்களுடைய பயம்
அவ்வப்பொழுது போனால்தான் என்ன
என்று வாக்குப் பிறழ்கிறது
கூட்டம் நிறைந்த பேருந்தில்
இருக்க இடமின்றி நெரிக்கும்போது
நாங்கள் அருகருகே நின்றிருக்கவேண்டாம்
காற்றுப்புகாமல்
என்பக்கம் அவள் திரும்பியபோது
அவள் மார்பும்,
எங்கள் உதடுகளும்
மூக்கு நுனிகளும் ஒன்றோடொன்று
தீக்குச்சி உரசியிருக்க வேண்டாம்
அதனால்மட்டுமே
அவள் சிவந்திருக்க வேண்டவே
வேண்டாம்தான் ம்ம்ம்
மறுநாளும் அதே பேருந்தையும்
அதே நெரிசலையும்
நாங்கள் எதிர்ப்பார்த்து நின்றிருக்கமாட்டோம்
தாஜ்மகாலையும்
இன்னபிற அதியங்களையும்
உலக அதிசயமென எவன் சொன்னது
அவள் பூப்படைந்த பின்னால்
அவளிடம் எத்தனை அதிசயங்கள் ம்ம்
பின்னிக் கழிந்த அவள் ஒற்றை ஜடை
பின்னிடுப்பிற்குக் கீழ்
மாறி மாறி தாளமிட
அவள் நடந்துகொண்டிருந்ததை
முதல் முறை பார்த்தபோது
வெறும் சிறு இதயத்தை மாத்திரம்
வைத்துக்கொண்டு
அதை எத்தனாவது அதிசயத்தில் சேர்ப்பேன் ம்ம் ,,
முன்பெல்லாம்
அவள் மழையில் நனைந்தபோது
வான் நோக்கி குடை பிடித்த
அதே கண்களும் கைகளும் தான் தெரியுமா
வயது எட்டியப்பின்னால்
வாஞ்சையாய்
அதே வானத்தைப்பார்க்கின்றன
இன்னும் சற்றுநேரம் பொழிந்திருக்கலாம் என்று ம்ம்
அவள் ஆடை ஒட்டிய தேசத்தில்
அதிசயங்கள் திரையவிழ
முத்தங்களால் காவியம் புனைந்திருப்பேனே ம்ம்ம்
தனியறை என்பதே எனக்கு பயந்தான்
அவள் பிறகான எல்லா நாட்களும்
யாரையும் என்னறைக்குள்
அனுமதியேன்
தம்பி கண்டுகொண்டான்
என் முதல் மாற்றத்தை
பாவம் தலையணைக்குத்தான்
வாயில்லை அதன் அவஸ்த்தை சொல்ல ம்ம்ம்
இதோ புற்களில் உறங்கிக் கிடக்கும்
பனித்துளி சேர்க்கிறேன்
என் விரல் நுனிமீது நிறுத்திய துளிகள்
அவள் இதழ்களில் ஊற்றவே ம்ம்
காயும் முன்னமே வருவாளா தெரியவில்லை ம்ம்
அறிந்திருப்பாளா ம்ம்
அவள் குழந்தை நிர்வாணம்கூட
அப்போதெல்லாம்
பெரிதில்லாத எனக்கு
இளம் மீசை முளைவிட்டப் பின்னால்
அவள் கெண்டைக்கால் மென்மை
என் தொண்டை தின்றிருக்கவேண்டாம்தான்
இதெல்லாமே கடந்துவிட்டப்பிறகு
திரும்பிப்பார்க்கும்
வெறும் பார்வைகள்தான்
இன்றுவரை எங்களுக்குள் மிச்சம் ம்ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"