வாழும் அறிவியல் கவிதை

விஞ்ஞானியாய் வாழ்ந்தார்
விந்தை பல செய்தார்
விண்ணைக் கலக்கினார்
பிருத்தி அக்னி ஏவுகணைகளால்


உலகைக் கலக்கினார்
பொக்ரான் அணு வெடிப்பால்
மாணவர் மனதைத்தொட்டார்
கனவு என்ற விதை விதைத்தார்


ஒரு இந்திய அரசியல்வாதி
மக்களுக்காக வாழ்ந்தார்
ஊழல் இன்றி உழைத்தார்
அதிசயம் ஆனால் உண்மை


எளிமையான இனிய மனிதர்
எவர் மனதையும் சுட்டதில்லை
பிறர் சூட்டை பொறுத்திட்ட
பொறுமையின் சிகரம்


தமிழன் என்ற தன்னடக்கம்
இந்தியன் என்ற இறுமாப்பு
இந்திய தேசத்தின் இலக்கியம்
எங்கள் இனிய கவிதை


இந்திய அறிவியல் உலகில்
பெரும் சாதனை மனிதனின்
மற்றும் ஒரு முகம் கவிஞன்
தமிழ் மணம் மாறாக் கவிஞன்


அறிவியல் கவிதை வீழ்ந்தது
இந்திய தேசம் இருண்டது
இந்திய விஞ்ஞானி நம்மிடம்
இறுதி விடை பெற்றார்!


விந்தைகள் செய்த விஞ்ஞானியே
கனவுகளை விதைத்த மெய்ஞானியே
இந்தியா ஒரு நாள் வல்லரசாகும்-நீ
வாழும் அறிவியல் கவிதை என வரலாறு கூறும்

எழுதியவர் : மோகனதாஸ் (14-May-16, 1:29 pm)
பார்வை : 384

மேலே