இசையில் தொடங்குதம்மா
ராஜாவின்
'எளங்காத்தில்' சிலாகித்து...
ரகுமானின்
'ராசாத்தி'யில் கதறி அழுது...
யுவனின்
'போகாதே'வில் செத்தே போகிறது
இந்த மனது...
மீண்டும்
'இசையில் தொடங்குதம்மா'வில்
ராஜாவாகி
பிறகு ரகுமானாகி
முடிவில் யுவனாகி
ஆறுதல் தேடுகிறது...