காதலை தேடி-3
காதலை(லே) தேடி ........
எத்தனையோ நாட்களை
கடந்து வந்து விட்டேன்....
வருகிறேன் என்று போன
நீயோ இன்னும் வரவில்லை.....
மழையும் வெயிலுமாய்
என் மயக்கத்தை கண்டு நகைக்கிறது...
அன்றொரு நாள்
மாலை பொழுதில்
நட்சத்திரங்களோடு அந்தபுரம் வந்த
நிலவோ என் தனிமையை கண்டு
வெகு சீக்கிரமே மேகங்களுக்குள்ளே
மறைந்து கொண்டது....
நானோ உன் நினைவுகளோடு
துயில் கொள்ளாமல் கண்ணீரை
மெத்தையாக்கி வான் நோக்கி
அழைத்து கொண்டிருக்கிறேன்
இந்த ஜென்மத்திலாவது
நம் காதலை கரை சேர்க்க
உன் காதலியின் கரம் கோர்க்க
விரைந்து வா அன்பு காதலனே என்று....

