ஒரு நிமிடக்கதை - அறிஞர் அண்ணாவுக்கு எதற்கு சிலை

ஈரோட்டில், "குடியரசு,' விடுதலை' பத்திரிகைகளில் துணையாசிரியர் பொறுப்பை ஏற்று பணிபுரிந்தார் அண்ணாதுரை. பிறகு, காஞ்சிபுரம் திரும்பி, "திராவிட நாடு' வார இதழை, 1942ல், துவங்கி நடத்தி வந்தார். அதில், அவர் எழுதிய சில கட்டுரைகள், நாட்டில் வகுப்புக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, அரசாங்கம் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. அப்போது காங்கிரஸ் அரசு, "திராவிட நாடு இதழை நிறுத்த வேண்டும...், இல்லையேல் அண்ணாதுரை, மூவாயிரம் ரூபாய் ஜாமின் தொகை கட்ட வேண்டும்...' என்று ஆணையிட்டது.

அண்ணாதுரை, இந்த ஜாமின் தொகை கட்ட, தொண்டர்களிடம் நன்கொடை கேட்டு, திராவிட நாடு பத்திரிகையில் எழுதினார். ஒரு சில நாட்களுக்குள்ளா கவே மூவாயிரம் ரூபாய் நன்கொடை வந்து சேர்ந்து விட்டது. அக்காலத்தில், அது மிகப் பெரிய தொகை.
உடனே அண்ணாதுரை, "உரிய தொகை சேர்ந்து விட்டது. இனிமேல், யாரும் பணம் அனுப்ப வேண்டாம்...' என்று, திராவிட நாடு பத்திரிகையில் அறிவிப்பு வெளியிட்டார்.

இதழுக்கு மூவாயிரம் ரூபாய் ஜாமின் தொகை கட்டிவிட்டு, அரசாங்கத்தின் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
"வகுப்பு கலவரத்தை தூண்டும் விதத்தில், அண்ணா துரையின் கட்டுரை இல்லை. ஜாமின் தொகையைத் திருப்பிக் கொடுக்கலாம்...' என்று ஆணையிட்டது கோர்ட். கோர்ட்டிலிருந்து ஜாமின் தொகை திரும்பக் கிடைத்ததும், நன்கொடை அனுப்பியவர்கள் அனைவருக்கும், மணியார்டர் மூலம் பணத்தைத் திருப்பி அனுப்பி வைத்தார் அண்ணாதுரை. அப்படிப்பட்ட நேர்மையான ஒருவரை, அரசியலில் இன்று காண முடியுமா?

—"அண்ணாதுரை வாழ்க்கை வரலாறு' நூலிலிருந்து.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (14-May-16, 11:26 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 181

சிறந்த கவிதைகள்

மேலே