கடவுளுக்கு ஏன் மாமா கண்ணு இல்ல வலிய எனக்கு குடுத்திருக்க வேண்டியது தான மாமா அப்படி சொல்லாதடி அந்த கடவுள் தான எனக்கு இப்படி ஒரு மனைவிய குடுத்துருக்காரு மாமா நானும் கடவுள் நல்லவர்னு தான் சொல்றன் எல்லா பொறப்புலயும் நீங்களும் நானுமே புருஷன் பொண்டாட்டியா வாழ்க்க தராரே என்ன பிரச்சனனாலும் சரியாகிடும் நாம சரியாக்கிடுவோம்

ஊணுருகி நோய் அண்டி கிடப்பேன் நான்
யாரும் அண்டாமல்
தூரச்செல்வர்
அவள் மட்டும் என்னருகில் அமர்ந்து
காலை பிடித்து விடுவாள்

அகோரமாக இருக்கிறேன்
என்று எல்லோரும் பயந்து ஓடுவார்கள்
என்னவள் மட்டும்
அழகாய் இருக்க மாமா
என்று சொல்லி முத்தமிடுவாள்

தொழுநோய்
அவனுக்கு
வந்துவிட்டது
அவனை
தொடாதே
என்று மிரட்டுவார்கள்
என்னால் அவரை தொடாமல் எல்லாம்
இருக்க முடியாது
அவர் என்னை தொட்டு தாலி கட்டிய என் புருஷன்
என் உயிர்.

நீங்க தூரமா நின்னு வேடிக்க மட்டும் பாருங்க.
அவருக்கு ஒன்னுன்னா
அது எனக்கு இல்லையா

அவர் கூட நான்
இருந்தா
அவருக்கு
ஒன்னும் இல்ல.
அவர் கூட தான் இருப்பன்.
அவர் கூட தான்
வாழ்வன்.
அவர் கூட தான்
சாவன்.

அவருக்கு வந்த சீக்கு
எனக்கும் வரணும்.
அவர் பட்ற எல்லா வேதனையும்
நானும் படணும்.
ரெண்டு பேருக்கும்
துணைலாம் வேண்டாம்.

நாங்க செத்தாலும்
ஒன்னா தான்
சாவோம்
அநாத பொணமா
ஆனாலும் நீங்க எல்லாம் வந்து நின்னு
எங்களுக்காக எதும் பண்ண வேண்டாம்
என்றிடுவாள் அவள்


பி மூத்திரம்
அள்ளிடுவாள்
என்னவள்
எனை பார்த்து
ரசித்துகொண்டே

வாந்தி எடுக்க
வாஷ்பேஷன்
போக முடியாமல்
எடுத்திடுவேன்
படுக்கையிலே
அவள் வந்து
எனை அவள் மீது சாய்த்துக்கொண்டு துடைத்திடுவாள்
நான் எவ்வளவு
கட்டுபடுத்த நினைத்தாலும்
வாந்தி வருவதை
தடுக்க முடியாமல்
தவித்திடுவேன்
அதை அறிந்த அவள்
எடுங்க மாமா
என்று கையை நீட்டிடுவாள்
என் சொறி பிடித்த
உடம்பை
கட்டிக்கொண்டு

அவள் மீதே வாந்திகளும்
ரத்தங்களும்
என வாரி இரைப்பேன்
அவள் எனை நன்றாக
பிடித்துக்கொண்டு
இப்ப உடம்பு எப்டிருக்கு மாமா என்பாள்

ரத்தங்கள் படிந்த
துணிகளை
துவைக்கும் போது
அழுதிடுவாள்
வலியை மறைத்திடுவாள்
நான் பார்த்தால்
கவலை படுவேன்
என்று உடனே
முகத்தை கழுவிடுவாள்


எனை சிறு குழந்தை போல் பிடித்துகொண்டு நடைபழக்கிடுவாள்
தாயான தாரம்

கட்டிலில் இருந்து
விழ முற்படுகையில்
வெடுக்கென பிடித்திடுவாள்

சோறு தண்ணீ
உண்ணாமல்
உண்ணா நோன்பிருந்து
நான் நன்றாக வேண்டுமென்று
அனுதினமும் வேண்டிடுவாள்

குளிர்காய்ச்சல் அடித்தால்
கஷாயம் தருவாள்
அவளே கஷாயமாகிடுவாள்

மருந்து என்று
ஒன்று தேவையே இல்லை
அவள் என் அருகில் இருந்தால்

~ பிரபாவதி வீரமுத்து


++++++++++++++++++++++

மாமா
உங்களுக்கு சரியாகிடும்.
உங்க கூடவே
எப்பயும்
நான் இருப்பன்.

உன்ன விட்டுட்டு நான்
போய்டுவன்டி

மாமா ஒத வேணுமா
வார்த்தையாலேயே என்ன
கொல்ற மாமா.
எங்கிட்ட இருந்து
உன்ன யாராலையும்
பிரிக்க முடியாது.

உங்களுக்கு மருந்தா நானே இருப்பன் மாமா
வலிக்கும் போதுலாம்
நான் என் மாமாவ
கட்டிபிடிச்சிப்பன்.
உங்களோட எல்லா வலியையும் எங்கிட்ட
குடுத்துடுங்க மாமா.

மாமா என்ன விட்டு
எங்கயும் போய்டாதீங்க மாமா.
நீங்க என் பக்கத்துலயே படுத்துக்கோங்க.
உங்கள விட்டு
ஒரு நிமிஷம் கூட தனியா இருக்கமாட்டன் மாமா.
செத்துடுவன் மாமா.

என்ன விட்டு போய்டாத மாமா.
உனக்கு முன்னாடி நான் போய்டுவன்.

சாகணும்னு
தோணுச்சினா
இவ்ளோ நாள்
நாம வாழ்ந்த
வாழ்க்கயலான்
நெனச்சி பாரு மாமா
எவ்ளோ அழகான வாழ்க்கை.

அப்படியும்
உனக்கு சாகணும்னு
தோணுனா
என்னயும் கூப்டு மாமா

வாழ்வும் சாவும் உன்னோட தான் மாமா

எத்தன ஜென்மம் எடுத்தாலும் நீ தான் மாமா என் புருஷன்
என்று சொல்லிக் கொண்டு மயங்கினாள் மயங்கிக்
கொண்டிருக்கும் மாமன் மீது.
இருவரின் இதயதுடிப்பும் அடங்கும்
நேரம்
இரு உயிரும் அடங்கியது ஒரே நேரம்
இருவரும்
ஒரு போர்வைக்குள்
துயிலுகிறார்கள்

~ பிரபாவதி வீரமுத்து

பிரச்சன இல்லாத வாழ்க்கையே கெடையாது.
எந்த பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது.அதேபோல
கட்டின புருஷனை என்னால தனியா தவிக்கவிட இயலாது
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (15-May-16, 2:44 pm)
பார்வை : 205

மேலே