அவளே ஒரு கோலமிடும் தேவதையாய்

அதுஒரு மார்கழி மாதக் காலை நேரம்,
நெஞ்சைத் துளைக்கும் குளிர் காற்று,
கோலமயில் வாசலில் கோலமிட்டுக்
கொண்டு இருக்கிறாள்!

அவளைத் தீண்டும் தென்றல்
கன்னத்திலும் முத்தமிடும்; கூந்தல்
காற்றில் பறக்கும் அலை அலையாய்
அங்கே அவளே ஒரு தேவதையாய்!

என் பார்வை அவளை மொய்க்கிறது,
அவள் கண்களின் ஒளி காலைச் சூரியனாய்,
தேவதையின் கொவ்வை இதழ்கள்,
என்னைக் கிறங்கடிக்கிறது!

கண்டவர் மயங்கும் அவள் உருவம்,
காணும் திக்கெல்லாம் பிரதிபலிக்கும்,
கண்கள் விரியக் காண்போர் அதிசயிக்கும்
அவள் நடை! நடையா! அல்ல நாட்டியம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-May-16, 3:32 pm)
பார்வை : 151

மேலே