தரவு கொச்சகக் கலிப்பா என்னப்பன்நீ முன்னில்வந்து நின்றபின்னே சொல்லிவிடு

என்னப்பன்நீ முன்னில்வந்து நின்றபின்னே சொல்லிவிடு
என்னவது என்மனதில் உள்ளதென்று சொல்லிவிடு
செல்வழியில் ஆலயங்கள் உண்டுபல என்றாலும்நான்
சொல்லவில்லை உன்நாமம் பலநாட்கள் சொல்லிவிடு
கள்ளமுண்டோ பள்ளமிரு நெஞ்சமிதில் கெஞ்சுகிறேன்
என்னப்பன்நீ முன்னில்வந்து சொல்லிவிடேன் நீயெனக்கு
என்னுடலை விட்டுவுயிர் வந்தடையும் அந்நாளிள்
என்னைப்பற்றி உன்கருத்து என்னெவென்று சொல்லிவிடு

எழுதியவர் : (15-May-16, 5:58 pm)
பார்வை : 52

மேலே